மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி தனது இரு கால்களையும் இழந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலன்னறுவையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எல்.பீ.சஞ்ஜீவ ஜெயலாத் (வயது36) என்பவர் மோட்டார் சைக்களில் பயணித்துக் கொண்டிருக்கும் போது புணானைப் பகுதியில் வைத்து எதிரே வந்த ஜீப் ரக வண்டியில் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

அத்துடன் ஜீப் வண்டியின் சாரதியை கைதுசெய்த பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.