வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் கஞ்சா, ஹொரோயின் போதைப்பொருளை கடத்த முற்பட்ட இரு பெண்களை நேற்று மாலை 5.00 மணியளவில் சிறைச்சாலை அதிகாரிகள் மடக்கி பிடித்து வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சிறைச்சாலைக்கு அருகே உள்ள வீதியில் நின்று சிறைச்சாலை வளாகத்தினுள் போதைப்பொருளை வீச முற்பட்ட சமயத்திலிலே இவ் இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேக்கவத்தை பகுதியினை சேர்ந்த 27 வயதுடைய பெண்ணிடமிருந்து 12கிராம் கஞ்சாவும் சாம்பல் தோட்டம் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணிடமிருந்து 140கிராம் ஹொரோயினையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.