களனி, தெலங்கபாத பகுதியில் முச்சக்கர வண்டியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியில் பயணித்த மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிக்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. களனி, தெலங்கபாத, விபத்து, பலி