ஈரானில் குடியிருப்பு பகுதி ஒன்றில் பொய்லர் தாங்கி ஒன்று வெடித்து சிதறியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஈரான் நாட்டின் வடகிழக்கில் அமைந்துள்ள மஷாத் நகரத்திலுள்ள மக்கள் வசிக்கும் குடியிருப்பு ஒன்றின் அருகில் இன்று காலை திடீரென பொய்லர் தாங்கி வெடித்து சிதறியது.

குறித்த விபத்தில் அங்கிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானதோடு மேலும், பொய்லர் தாங்கி வெடித்து சிதறியதில் அருகில் இருந்த மூன்றுக்கும் மேற்பட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.

தகவலறிந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பலியானவர்களின் உடல்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக உள்ளூர் பொலிஸார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.