இளையதளபதி விஜயின் ரசிகர்களுக்கு சர்கார் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து விருந்து தர தீர்மானித்திருக்கிறது. 

விநாயகர் சதுர்த்தியன்று சர்கார் படத்தின் டீஸர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் இசை வெளியீட்டு திகதியை அறிவித்து தளபதியின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவான ‘சர்கார் ’ படத்தின் இசை, எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது. அத்துடன் நில்லாமல் தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு ‘சர்கார் ’படத்தின் படபிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒவ்வொன்றாக வெளியிடவிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி சாதனையாக்கி விட வேண்டும் என்று தற்போதே தயாராகிவிட்டார்கள். 

இதனிடையே படபிடிப்பு தளத்தில் தளபதி தோன்றும் ஒரு புகைப்படத்தை நடிகை வரலட்சுமி, அவருடைய இணையப்பக்கத்தில் வெளியிட்ட போது, அதனையும் வைரலாக்கி டிரெண்டிங் ஆக்கியவர்கள் விஜய் ரசிகர்கள் என்பதும், சர்கார் ஃபர்ஸ்ட் லுக்கையும் வைரலாக்கி உலகளவில் பெரிய அதிர்வையும் ஏற்படுத்தியவர்கள் விஜய் ரசிகர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் சன்பிக்சர்ஸின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.