இன்று முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க வீரகெட்டிய நயிகல புராண ரஜமகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு சமய வழிபாடுகளில் ஈடுபட்டார். 

அதன் பின்னர் நயிகல புராண ரஜமகா விகாராதிபதி வண. முருத்தவெல சுமன நாயக்க தேரரை தரிசித்து அவரின் நலன் தொடர்பில் விசாரித்தறிந்தார்.

நிக்கினி பூரண தினத்தை முன்னிட்டு பெருமளவிலான பிரதேச மக்கள் விகாரைக்கு வருகை தந்திருந்ததுடன், அவர்கள் மிகுந்த அன்புடன் ஜனாதிபதியை வரவேற்றனர். 

ஜனாதிபதி பிரதேச மக்களின் நலன் தொடர்பில் கேட்டறிந்ததுடன், சுமூகமான கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.