தமிழகத்தில் யாருடன் தேர்தல் கூட்டணி என்பது குறித்துபேச்சு வார்த்தை நடத்த நிறைய கால அவகாசம் உள்ளது என்று தமிழக பா. ஜ. க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, 

‘ஏதேனும் பொது நிகழ்வுகளில் இரு கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டால் அவர்கள் கூட்டணி அமைப்பார்கள் என்று முத்திரை குத்துவது தவறு. தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த இன்னும் நிறைய கால அவகாசம் உள்ளது.’ என்றார்.

முன்னதாக ஒகஸ்ட் 30 ஆம் திகதியன்று சென்னையில் நடைபெறவிருக்கும் கலைஞர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்வில் பா. ஜ. க. தலைவர் அமித் ஷா பங்குபற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

பிறகு அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, ‘தி.மு.க. தலைவர் கருணாநிதியின் இரங்கல் கூட்டத்தில் பா .ஜ. க.வின் தலைவர் அமித் ஷா பங்குபற்றபோவதில்லை ’என்பது போன்று டுவீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.