முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரரின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இன்று காலை மெதமுலானவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள சந்திரா ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அஞ்சலி செலுத்தினார்.

இதன் போது கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பற்றற்ற பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.