வடபகுதியில் வீடமைப்பு திட்டத்தினை முன்னெடுக்க சீனா விருப்பம்

Published By: Rajeeban

25 Aug, 2018 | 11:35 AM
image

இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடபகுதியில் வீடமைப்பு தி;ட்டங்களை முன்னெடுக்க விரும்புவதாக சீனா தெரிவித்துள்ளது.

ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது.

கொழும்பிற்கான சீனா தூதரகத்தின் அரசியல் பிரிவின் தலைமை அதிகாரி லுவோ சொங் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் மையமாக விளங்கிய வடக்குகிழக்கில் வீடுகளையும் வீதிகளையும் அமைத்துக்கொடுப்பதற்கு சீனா விரும்புகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது நிலைமை வேறுமாதிரியானதாக உள்ளதால் நாங்கள் தொலைதூர பகுதிகளில் அதிகளவு திட்டங்களை இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ் சமூகத்தின் ஆதரவுடன் முன்னெடுக்க தயாராகவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்

சீனா வடக்கி;ல் வீடுகளை கட்டித்தருவதற்கு விருப்பம் வெளியிட்டுள்ளதை இரு அமைச்சர்களும் உறுதி செய்துள்ளனர்.

சீனா வடக்கில் வீடுகள் வீதிகள் போன்றவற்றை ஏனைய போட்டியாளர்களை விட குறைந்த செலவில் கட்டித்தர முன்வந்துள்ளது என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனா கிராமிய அபிவிருத்தி தி;ட்டங்களான வீடுகளை அமைத்தல் நீர்சேகரிப்பு வசதிகளை அமைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு கூட தயாராகவுள்ளது என தன்னை இனம்; காட்ட விரும்பாத அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்பிரல் மாதம் சீனாவின் நிறுவனமொன்று வடக்கில் 40,000 வீடுகளை கட்டுவதற்கான 300 மில்லியன் டொலர் திட்டத்தை பெற்றது சீனாவின்  எக்சிம் வங்கி இதற்கு நிதி உதவ வழங்க முன்வந்தது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

எனினும் பொதுமக்கள் தங்கள் பாராம்பரியத்தின் படி செங்கல் வீடுகளை கோரியதை தொடர்ந்து இந்த திட்டம்; இடைநிறுத்தப்பட்டதாக  ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.

இது இந்தியா இந்த விடயத்தில் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்திய உதவியுடன் வீடமைப்பு திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் அதிகாரிகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளனர் எனவும் ரொய்ட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31