மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதில் மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை எகமனதாக தோற்கடிக்கப்பட்டது.

குறித்த வாக்கெடுப்பில் மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கைக்கு எதிராக 139 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இவ் வாக்கெடுப்பின் போது எவ்வித வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்படவில்லை.

மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஒன்றிணைந்த பொது எதிரணி ஆகியன எதிராக வாக்களித்த அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.