சிங்கப்பூர் கழிவுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித பாதகமும் ஏற்படப்போவதில்லை. 

ஒவ்வொரு வருடமும் மீளாய்வுகள் மேற்கொள்ளப்படும் வகையிலேயே இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் சிங்கப்பூர் கழிவுகளை இங்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை .

நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்காகவும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவுமே சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதனூடாக நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் கழிவுகளை இங்கு கொட்டுவது தொடர்பாக எவ்வித உடன்படிக்கைகளும் மேற்கொள்ள வில்லை. அத்துடன் ஒவ்வொரு வருடமும் இந்த சதந்திர வர்த்தக ஒப்பந்தம் மீளாய்வு செய்யும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

2018 ஆம் ஆண்டுக்கான கட்டுமான நிர்மானதுறைசார் கண்காட்சி அங்குரார்ப்பன நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.