(எம்.மனோசித்ரா)

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி மதுபான போத்தல்கள் வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

சுற்றிவளைப்பின் போது இவரிடமிருந்து 37 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ளவர் 62 வயதுடைய கலகஹல பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

இவரிடம் மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.