போபிட்டிய ஒடோ என்டர்பிரைசஸிற்கு ஆசிய பசுபிக் தொழில்முயற்சியாளர் விருது 2018

Published By: R. Kalaichelvan

24 Aug, 2018 | 03:24 PM
image

போபிட்டிய ஒடோ என்டர்பிரைசஸ் ஸ்தாபகரும், இலங்கையில் முன்னணி மோட்டார் வாகன உதிர்ப்பாகங்கள் உற்பத்தியாளரும், விநியோகத்தரும், ஏற்றுமதியாளருமான ஜுட் ரொட்ரிகோ அவர்களுக்கு ஆசிய பசுபிக் தொழில் முயற்சியாண்மை விருதுகள் 2018 இல் உற்பத்தி துறையில் சிறந்த வியாபார தலைவருக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.கொழும்பில் நான்காவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் வைபவத்தில் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் ரிஷாத பதியுதீன், சுற்றுலாத்துறை அபிவிருத்தி,கிறிஸ்தவ மத விவகாரங்கள் மற்றும் காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க,என்டர்பிரைஸ் ஏசியாவின் தலைவர் டத்தோ வில்லியம் என்ஜி மற்றும் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவரான தினேஷ் வீரக்கொடி ஆகியோர் கலந்து கொண்டனர். 

என்டர்பிரைஸ் ஏசியாவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், தொழிற்முயற்சியாண்மை சிறப்பு நிலைபேறாண்மை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

மலேசியா, இந்தோனேசியா, புரூனை,சிங்கப்பூர், ஹொங்கொங், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ISO 9001:2015, ISO 14001: 2004 சான்றை பெற்ற நிறுவனமான போபிட்டிய ஒடோ என்டர்பிரைசஸ், 500 க்கும் அதிகமான வாகன உதிர்பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.

 fastening, suspension components, automotive leaf springs and accessories, இதில் பல மாடிக் கட்டிடங்களுக்கான hanger bolts அடங்கியுள்ளதுடன், மற்றும் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட எளிய பொறியியல் தயாரிப்புகளும்அடங்கியுள்ளன. 

நிறுவனம் சூழலுக்கு நட்பான உற்பத்தி ஆலையை தன்வசம் கொண்டுள்ளதுடன், இதனூடாக உயர் தரம் வாய்ந்த leaf springsஉற்பத்தி செய்யப்படுகின்றன.

ஜுட் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “தொழில்முயற்சியாண்மை என்பது சவால் நிறைந்த பயணமாகும்.

தொடர்ச்சித்தன்மை மற்றும் புத்தாக்க சிந்தனை போன்றவற்றினூடான புத்தாக்கமான செயற்பாடுகள் போன்றன எமது தொழில்முயற்சியாண்மையில் அதிகளவு பெறுமதியை சேர்த்திருந்தது. 

இலங்கையில் முன்னணி வாகன உதிரிப்பாக உற்பத்தியாளராக திகழவும் வழிகோலியிருந்தது” என்றார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “உள்நாட்டு வீதி சூழலுக்கு பொருத்தமான நீண்ட காலம் பாவிக்கக்கூடிய தயாரிப்புகளை நாம் தொடர்ச்சியாக உற்பத்தி செய்து விநியோகிக்கிறோம். வாடிக்கையாளர்களின் தன்னிறைவை அடிப்படையாகக் கொண்டு எமது மூலோபாயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. 

புதிய வழிமுறைகளை காண்பதுரூபவ் பல சர்வதேச சந்தைகளுக்கு விஸ்தரிக்கப்படுவது,நிறுவனத்தின் இலாகாவை பன்முகப்படுத்துவது போன்றன தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் முன்னணி வாகன உதிரிப்பாக வர்த்தக நாமமாக திகழ்வது எமது இலக்காகும்” என்றார்.

நிறுவனத்தின் பிரத்தியேகமான புத்தாக்க சிந்தனை மற்றும் வியாபார மூலோபாயங்களை நிறைவேற்றும் போது 5S, Kaizen, JIT, TPM மற்றும்TQM போன்றவற்றை பின்பற்றுவதில் ஸ்தாபகரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடனான நடவடிக்கைகள் போன்றவற்றுக்காக ஜப்பானிய ஆசிய உற்பத்தித்திறன் நிறுவனத்தின் “மாதிரி தொழிற்சாலை” என்பதற்காகவும் நிறுவனம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

37 வருடங்களுக்கு அதிகமான ஒப்பற்ற சேவையை வழங்கி வரும் போபிட்டிய ஒடோ என்டர்பிரைசஸ், இலங்கை ஏற்றுமதியாளர் சம்மேளனத்தினால் சிறந்த ஏற்றுமதியாளராக கௌரவிக்கப்பட்டிருந்தது. 

இதை உறுதி செய்யும் வகையில் தேசிய வர்த்தக சம்மேளனத்தின் வியாபார சிறப்புக்கான தேசிய தங்க விருது, CNCI இன் தொழிற்துறை சிறப்புக்கான தேசிய கிறிஸ்டல் விருது, FCCISL  இனால் தொழில்முயற்சியாளருக்கான தேசிய தங்க விருது, இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்தின் ஆண்டின் சிறந்த சிறிய, நடுத்தரளவு வர்த்தக நாமத்துக்கான தேசிய தங்க விருது, தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின் தேசிய உற்பத்தித்திறன் விருது,NEDA மற்றும் NCC 2017இல் ஏற்பாடு செய்திருந்த தொழில்முயற்சியாண்மை விருதுகள் நிகழ்வில் சிறந்த வலுச் சிக்கனம், சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் சிறந்த வியாபாரநிறுவன விருது போன்ற மூன்று விருதுகள் அடங்கலாக 60க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57