அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான வல்லுனர்களின் சங்கமென்பது இலங்கையை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதற்கான முறைமையை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுனர்களின் ஒன்றியமாகும். 

ஐக்கிய இராச்சியத்தின் Huddersfield பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிலந்தி அமரதுங்கவினால் தலைமை உரையாற்றப்பட்டது. 

பேராசிரியர் டிலந்தி அமரதுங்கவுக்கு ஜனாதிபதி நினைவுச் சின்னம் வழங்கினார். 

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் செயலாளர் என்.ஏ.சிசிர குமாரவினால் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கிவைக்கப்பட்டது. 

இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார, அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி புத்தி வீரசிங்க உள்ளிட்ட சங்கத்தின் உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.