எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தியால் பாடசாலையில் இருந்து நீக்கப்பட்ட சிறுவனுக்கு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உணவூட்டியுள்ளார்.

நேற்று குளியாப்பிட்டியவிலுள்ள அவரது வீட்டுக்கு சென்ற பிரதி அமைச்சர் உணவு ஊட்டி சிறுவனுடன் விளையாடி உள்ளார்.

அதன்பின்னர், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் ரஞ்சன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார். 

இதன்போது, சிறுவனின் தாயிடம் ஜனாதிபதி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.