விளை­யாட்டுத்துறை சட்டத்தினூடாக, அத் துறை சார்ந்த அமைச்சருக்கு வழங்­கப்­பட்­டுள்ள எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களைக் குறைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க விசேட குழு­வொன்று நிய­மிக்­கப்பட்­டுள்­ளது. 

விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­த­பாவால் இக் குழு நிய­மிக்­கப்பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கலைங்க இந்திரதிஸ்­ஸவின் தலை­மையில்  இக் குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 9 பேர் அங்கம் வகிக்­கின்­றனர்.

 இக் குழு­வா­னது நடை முறையிலுள்ள விளை­யாட்டுத் துறை சட்டத்தை ஆராய்ந்து, அதில் அமைச்­ச­ருக்குக் கொடுக்­கப்பட்­டுள்ள எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களை கட்­டுப்­ப­டுத்த எவ்­வா­றான வழிமுறை­களை மேற்கொள்ளலாம் என்­பது தொடர்­பிலும் அவசியம் ஏற்­படின் குறித்த சட்­டத்தில் எவ்­வா­றான திருத்­தங்­களை முன்­னெ­டுக்­கலாம் என்­பது தொடர்­பிலும் பரிந்­து­ரைக்­க­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.