முக்கிய வாக்­கெ­டுப்பு குறித்து பாராளுமன்றில் தீர்­மானம் இன்று !

Published By: Daya

24 Aug, 2018 | 10:40 AM
image

மாகாண சபை­க­ளுக்கு புதிய முறை­மையின் கீழ் தேர்தல் நடத்தும் நோக்கில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை இன்று வெள்­ளிக்­கி­ழமை விவா­தத்­துக்கு எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. எனினும் குறித்த அறிக்­கையின் மீது வாக்­கெ­டுப்பு நடத்­து­வதா? இல்­லையா?  என்­பது தொடர்­பான இறுதி தீர்­மானம் இன்று கூட­வுள்ள கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

ஐக்­கிய தேசிய முன்­னணி, கூட்டு எதி­ரணி உட்­பட சிறு­பான்­மை­யின கட்­சிகள் எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பான தமது தீர்­மா­னங்­களை நேற்று கூடிய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் அறி­வித்­த­தனை அடுத்தே மேற்­படி தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கட்சி தலை­வர்கள் கூட்டம் நேற்று பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது. இதன்­போது சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்­பாக சரத் அமு­னு­கம, தமிழ் முற்­போக்கு முன்­னணி சார்­பாக அதன் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் உட்­பட அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­திகள் வருகை தந்­தி­ருந்­தனர்.

கட்சி தலை­வர்கள் கூட்­டத்தின் போது இன்று வெள்­ளிக்­கி­ழமை நடத்­தப்­ப­ட­வுள்ள எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை மீதான விவாதம் தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது. 

எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதி­ராக வாக்­க­ளிக்க ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் நேற்­றைய பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் தீர்­மா­னங்கள் எடுத்­தி­ருந்­தன. இதன்­படி  இரு கட்­சி­களும் நேற்று பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் எடுத்த தீர்­மா­னங்­களை  கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் அறி­வித்­தன. 

அதே­போன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு,தமிழ் முற்­போக்கு முன்­னணி, ஈழ மக்கள் ஜன­நா­யக கட்சி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய சிறு­பான்மை இனங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கட்­சி­களும் எல்லை நிர்­ணய அறிக்­கைக்கு எதி­ராக தமது தீர்­மா­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தன.

இதனால் நேற்­றைய கட்சி தலை­வர்கள் கூட்­டத்தில் எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை தொடர்பில் இணக்­க­பாட்­டுக்கு வர முடி­யாத நிலைமை ஏற்­பட்­ட­தனை அடுத்து எல்லை நிர்­ணய அறிக்­கையை வாக்­கெ­டுப்­புக்கு விடு­வதா? இல்­லையா? என்­ப­தனை இன்­றைய தினம் காலை கூடி தீர்­மா­னிப்­ப­தற்கு கட்சி தலை­வர்கள் முடிவு செய்­தனர். இதன்­பி­ர­காரம் இன்று காலை எல்லை நிர்­ணய அறிக்கை மீதான வாக்­கெ­டுப்பு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும் பாராளுமன்ற ஒழுங்கு புத்தக பதவின் பிரகாரம் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு  எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்