அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக ஸ்கொட் மோரிசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

லிபரல் கட்சியின் தலைவராகவும், அவுஸ்திரேலியாவின் பிரதமராகவும் இருந்த  மல்கம் டெர்ன்புல் நீக்கப்பட்டதையடுத்து , அவுஸ்திரேலியாவின் 30 ஆவது பிரதமராக  ஸ்கொட் மோரிசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

லிபரல் கட்சியின்  பொருளாளராக ஸ்கொட் மோரிசன்  செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.