விக்கினேஸ்வரனின் கோரிக்கை தமிழ்த்தேசிய கூட்டமைப்பால் நிராகரிப்பு 

Published By: R. Kalaichelvan

24 Aug, 2018 | 07:29 AM
image

வடகிழக்கு மாகாணங்களுக்கான அபிவிருத்தி செயலணியில் கலந்து கொள்ளவேண்டாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி  செயலணி அடுத்த வாரம் கூடவுள்ளது. 

இ ந்நிலையில் அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும் வரை அபிவிருத்தி செயலணியில் தாம் கலத்து கொள்ளப் போவதில்லை எனவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டாம் எனக்கோரி முதலமைச்சர் சீ.வி.விக்னே ஷ்வரன் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்மந்தனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழ்தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று கூடி ஆராய்ந்துள்ளது. இதன்போது வடகிழக்கு மாகாணங்களில் மக்களுக்கு பல்வேறு அபிவிருத்தி சார் பிரச்சினைகள் உள்ளது.

இதற்கும் மேல் நில ஆக்கிரமிப்பு, சிங்கள குடியேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இவற்றை குறித்து பேசுவதற்கும் தீர்வினை காண்பதற்கும் சிறந்த களமாக ஐனாதிபதி செயலணி அமைந்துள்ளது.

ஆகவே செயலணியின் கூட்டத்தில் நிச்சமாக கலந்து கொள்ளவேண்டும் என பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர். 

இதனை யடுத்து கூட்டத்தில் கலந்து கொள்வதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01