தையிட்டி விகாரைக்கு அனுமதி இல்லையா?

Published By: Digital Desk 4

23 Aug, 2018 | 06:07 PM
image

வடக்கு ஆளுனரால் அடிக்கல் நாட்டப்பட்ட விகாரைக்கு பிரதேச சபை அனுமதி வழங்கவில்லை என சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன 

காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் திஸ்ஸ விகாரை இருந்ததாகவும் அதனை மீள புனர்நிர்மாணம் செய்வதற்கான அடிக்கல் நாட்டு விழா என நேற்றைய தினம் புதன்கிழமை பாதகட விமலஞான தேரர் தலைமையில் நடைபெற்றது. 

அந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே கலந்து கொண்டு விகாரை அமைவதற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்தார். 

குறித்த விகாரையானது, கடந்த 1946 ஆம் ஆண்டு எழுதப்பட்ட உறுதி அடிப்படையில் அக் காணியில் அமைந்திருந்தது எனவும் , குறித்த விகாரை பல நூற்றாண்டுகளாக இப்பகுதியில் இருந்துவந்துள்ளது. 1954.05.17 ம் திகதி இறுதியாக வெசாக் பண்டிகை கொண்டாப்பட்டுள்ளது. 

எனவும் அதன் பின்னர் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தினால் குறித்த விகாரை முற்றாக அழிவடைந்திருந்தது எனவும்,  அதனை மீள் நிர்மாணம் செய்யும் பணிக்கான ஆரம்ப வேலை நேற்றைய தினம் புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது என வடமாகாண ஆளுனர் தெரிவித்திருந்தார். 

அந்நிலையில் குறித்த விகாரை அமைந்துள்ள காணி முன்னர் பௌத்த மதகுருமாருக்கு சொந்தமான காணி எனவும் , உள்நாட்டு யுத்தம் காரணமாக பௌத்த மதகுருமார் அங்கிருந்து வெளியேறி இருந்தனர் எனவும் , பின்னர் மீள தையிட்டி பகுதியில் மக்கள் மீள குடியேற அனுமதிகப்பட்ட பின்னர் அவர்கள் தமது காணியினை அடையாளப்படுத்தி சென்று இருந்தனர் எனவும் , இந்நிலையில் குறித்த காணியினுள் விகாரை அமைப்பதற்கு வலி.வடக்கு பிரதேச சபை அனுமதி வழங்கி இருக்கவில்லை. வலி. வடக்கின் அனுமதியின்றி நேற்றைய தினம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என வலி.வடக்கு பிரதேச சபை வட்டார தகவல்கள் தெரிவிகின்றன. 

அந்நிகழ்வில் பெருமளவான இராணுவத்தினர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை தையிட்டி பகுதியானது , உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்த கால பகுதியில் இருந்து இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாகவே இருந்து வந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04