ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கபடி விளையாட்டில் ஆண்கள் மற்றும் மகளிர் இரு பிரிவுகளிலும் அடைந்த தோல்விக்குப் பொறுப்பேற்று இலங்கை கபடி சங்கத் தலைவர் ஈ.டி.பதிரண பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.தனது இராஜினாமாக் கடிதத்தை விளையாட்டுத்துறை அமைச்சருக்கு கையளித்துள்ளதாக கபடி சங்கத் தலைவர் தெரிவித்தார். 

ஆசிய விளையாட்ட விழாவில் இருபாலாரிலும் கபடிப் போட்டிகளில் பதக்கம் வெல்வார்கள் என்று பெரிதும் எதிரப்ர்க்கப்பட்டது. 

அதேவேளை இவர்கள் ஆசியத் தொடருக்கான பயற்சிகைளப் பெற்றது இந்தியாவின் பிரபல பயிற்சியாளரின் கீழ்தான் இதில் நான்கு போட்டிகளில் கலந்துகொண்ட மகளிர் அணி இரண்டு போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற்றது. 

அதேபோல் ஆண்கள் அணியோ ஒரே ஒரு போட்டியில்தான் வென்றது. 

இதன் காரணமாகவே தனது பதவியை இராஜினாமா செய்வதாக பத்திரன தெரிவித்துள்ளார்.