இலங்கையின் சார்பில் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்ற மூன்று கொல்ப் வீரர்கள் சுற்றுத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் தொழில்முறை கொல்ப் போட்டியாளர்களாக இருப்பது இதற்குக் காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

மொத்தமாக 25 நாடுகள் முன்வைத்த ஆட்சேபனையைத் தொடர்ந்து இலங்கை வீரர்களை சுற்றுத்தொடரிலிருந்து நீக்குவதென ஆசிய ஒலிம்பிக் குழு தீர்மானித்தது. 

எவ்வாறேனும் முன்னைய விழாக்களில் தொழில்முறை கொல்ப் போட்டியாளர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்ததால் இம்முறை இவர்கள் மூவரையும் இந்தோனேஷியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக இலங்கை குழாமுக்கு பொறுப்பான பிரதித் தலைவர் காமினி ஜயசிங்க தெரிவித்தார்.

ஆசிய ஒலிம்பிக் குழுவின் தீர்மானத்தை மதித்து மிதுன் பெரேரா, அனுர ரோஹன, நடராஜா தங்கராஜா ஆகிய மூவருமே நாடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மூவருக்கும் பதிலாக சிசிர குமார அம்ரித் டி சொய்சா சசித்ர டி சில்வா ஆகியோர் இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.