பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான டிரப்பசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதன் பின்னா கத்திக்குத்தில் ஈடுபட்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலின் பின்னர் அந்த நபர் வீடொன்றிற்குள் மறைந்திருந்தார் பின்னர் வீட்டிலிருந்து வெளியே வந்து பொலிஸாரை அச்சுறுத்தினார் அவ்வேளை அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலிற்கான காரணத்தை இதுவரை வெளியிடாத அதிகாரிகள் கொல்லப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இது குடும்ப தகராறு என கருதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கத்திக்குத்தினை மேற்கொண்ட நபர் உளவியல் பாதிப்பிற்கு உள்ளானவர்  என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

டிரெப்பர்சை சேர்ந்த அந்த நபருக்கு 30 வயது ,2016 இல் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்தமைக்காக பொலிஸாரால் விசாரிக்கப்பட்டார்,அதேவேளை அவர் உளவியல் பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர் என அதிகாரிகள் கருதவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.