டெஸ்ட் வெற்றி குறித்து ரவிசாஸ்திரியின் கருத்து என்ன?

Published By: Rajeeban

23 Aug, 2018 | 04:20 PM
image

இங்கிலாந்திற்கு எதிராக நேற்று டிரென்ட்பிரிஜ் மைதானத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியே எனது வாழ்நாளில் வெளிநாட்டில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி என இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நான் பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வரும் கடந்த நான்கு வருடங்களில்  பெற்ற வெற்றிகளில் இதுவே மிகச்சிறந்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் கடந்த தொடரில் பெற்ற வெற்றி துணிச்சலுடன் போராடி பெறப்பட்ட வெற்றி என குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி இந்த வெற்றி அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி பெறப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

துடுப்பாட்டம் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்று விடயங்களிலும் சிறப்பாக செயற்பட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது டெஸ்டில் வெற்றிக்கு அருகில் நெருங்கி தோற்றதால் ஏமாற்றமடைந்தோம் இரண்டாவது டெஸ்டில் படுதோல்வியடைந்தோம் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி இதன் காரணமாக நாங்கள் எங்களை நிருபிக்கவேண்டிய நிலையிலிருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சு குழாமில் இதுவே தலைசிறந்தது  இதுவரை விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களை இவர்கள் மிக முன்னணியில் உள்ளனர் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளோம் இது மிகவும் சவாலான விடயம் என குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி ஓய்வெடுங்கள் ,இந்த டெஸ்டில் நீங்கள் செய்த சிறந்த விடயங்களை நினைத்துக்கொள்ளுங்கள்,அதனை தொடர்ந்து முன்னெடுங்கள்,எனினும் அடுத்த டெஸ்ட் போட்டியை நீங்கள் புதிதாக ஆரம்பிக்கவேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் இதுவே அடுத்த டெஸ்ட் குறித்து நான் அணியினருக்கு தெரிவிக்கும் செய்தி எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35