ஜப்பான் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன?

Published By: Rajeeban

23 Aug, 2018 | 03:38 PM
image

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனொடொராவின்  இலங்கைக்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம், இந்தியாவும் சீனாவும் தமது கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள இந்து சமுத்திரத்தில் ஜப்பானும் ஆழக்கால்பதிக்கி;ன்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஒனொடொராவின் விஜயம் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு முதல்தடவையாக மேற்கொண்ட விஜயமாகும்.

இந்த விஜயத்தின்போது சீனாவின் புதிய பட்டுப்பாதை திட்டத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் அமைச்சர் சென்றிருந்தார்.

இந்த வருடம் அம்பாந்தோட்டைக்கு ஜப்பானின் இரு விஜயங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் ஜப்பானின் இராஜதந்திரிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

ஏப்பிரல் மாதம் ஜப்பானின் கடற்படை கப்பலான அகபொனோ அம்பாந்தோட்டைக்கு சென்றது. 

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்ட பின்னர் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது கடற்படை கலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அம்பாந்தோட்டை குறித்த ஜப்பானின் மூலோபாயக்கொள்கை அதன் வெளிப்படையான திறந்த கடல் என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டது.

ஸ்திரதன்மை மற்றும் பொருளாதார வளத்தை உறுதிசெய்வதற்காக விதிமுறைகைள அடிப்படையாக கொண்டகடல்சார் அமைப்பு முறை என்பதே  திறந்த கடல் என்ற கொள்கையாகும்.

இலங்கை மிக முக்கியமான கடல்சார் நாடு, இந்து சமுத்திர கடல்பரப்பில் மிகமுக்கியமான பாதையில்  இலங்கை அமைந்துள்ளது என ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சை சேர்ந்து முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அம்பாந்தோட்டை மீது கவனம் திரும்பியுள்ளதன் காரணமாக அதனைபோன்ற மற்றுமொரு கடல்சார் வளத்திலிருந்தும் கவனம் திரும்பியுள்ளது- திருகோணமலை துறைமுகமே அது.உலகின் இரண்டாவது இயற்கை துறைமுகம்.

கடற்படை நிபுணர்களை பொறுத்தவரை அது  மிகவும் பெறுமதியான பொக்கிசம்.

சீனாவிற்கு போட்டியாக திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் முயற்சிகளில் இந்தியா சிங்கப்பூருடன் இணைந்து ஈடுபடுவது குறித்து ஜப்பான் ஆராய்ந்து வருகின்றது.

இந்த துறைமுகத்திற்கும் ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை அரசாங்கம் திருகோணமலையின் மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்தி அதனை ஏற்றுமதிக்கான தளமாக மாற்ற எண்ணுகின்றது.

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமானநிலையத்தை அமைக்கும் எண்ணமும் உள்ளது.

சீனாவிற்கான இலங்கையின் கடன்களை குறைப்பதற்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் சைனா மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங் நிறுவனத்திற்கு  99 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்ததிலிருந்து இலங்கையில் சீனா தனது செல்வாக்கை அதிகரிக்கின்றது என்ற கருத்து வலுப்பெற்று வந்துள்ளது.

கடந்த வாரம் பென்டகன் தனது வருடாந்த அறிக்கையில் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

சீனா தனது புதிய பட்டுப்பாதை திட்டத்தின் ஊடாக தனது நிதிப்பலத்தை காண்பிக்கின்றது என்பதற்கான அவதானமாகயிருக்க வேண்டிய உதாரணம் என அம்பாந்தோட்டையை பென்டகன் சுட்டிக்காட்டியிருந்தது.

சீனாவின் மூலதனத்தில் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்துவதன் இந்து சமுத்திரத்தை ஆதிக்கம் செய்வதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது எனவும் பென்டகன் குறிப்பிட்டிருந்தது.

எனினும் கொழும்பில் உள்ள சீன இராஜதந்திரிகள் விமர்சகர்கள் அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த உடன்படிக்கையை தெளிவாக படிக்கவில்லை என்கின்றனர்.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார பொறுப்புகளை இலங்கை அதிகாரிகளிற்கே வழங்கியுள்ளது என்பது அவர்கள் வாதம்

அம்பாந்தோட்டைக்கு யுத்தக்கப்பல்கள் வருகையை கூட  இலங்கை அதிகாரிகளே தீர்மானிக்கின்றனர் என்கின்றனர் சீன இராஜதந்திரிகள்

ஜப்பான் தனது பொருளாதார உயிர்நாடியை பாதுகாக்க முயல்கின்றது என கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகவும் மும்முரமான கடற்பாதையின் நுனியில் அம்பாந்தோட்டை அமைந்துள்ளது.இந்த பாதை வழியாக வருடம்தோறும் 60,000 கப்பல்கள் செல்கின்றன.

இந்த கப்பல்கள் உலகின் 60 வீதமான எண்ணெயை கொண்டு செல்கின்றன.

சீனாவிற்கு இந்த கடல்பாதை எவ்வாறு முக்கியமோ அதேபோன்று ஜப்பானிற்கும் அது முக்கியம், என தெரிவிக்கும் மேற்குலக இராஜதந்திரி இரு நாடுகளும் இலங்கையுடன் தங்களிற்கு காணப்படும் நல்லுறவை இதற்காக பயன்படுத்த முயல்கின்றன என குறிப்பிடுகின்றார்.

இலங்கையில் சீனாவை எதிர்கொள்வதற்கு  இந்தியாவை விட ஜப்பானை பயன்படுத்துவது அமெரிக்காவிற்கு பயனளிக்கும் விடயமாக  அமையும் என மேலும் தெரிவிக்கும் மேற்குலக இராஜதந்திரி இந்தியாவை விட ஜப்பானை இலங்கை மக்கள் நம்புகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றார்.

நன்றி ஏசியா நிக்கெய் 

தமிழில் வீரகேசரி இணையத்தளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54