அநுராதபுரம், ரலபனாவ பகுதியில் குளவி தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் மரணமடைந்துள்ளார்.

ரலபனாவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய விவசாயி ஒருவரே இன்று அதிகாலை வீதியில் சென்று கொண்டிருந்த போது  குளவி தாக்குதலுக்கு இலக்காகி நொச்சியாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.