விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டது குறித்து நானும் எனது சகோதரியும் மகிழ்ச்சியடையவில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் எனது குடும்பத்தை சேர்ந்த இருவரை வன்முறை காரணமாக இழந்தேன் என  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

எனது பாட்டியும் எனது தந்தையும் கொல்லப்பட்டனர்,ஆகவே நான் வன்முறைகளால் துயரை அனுபவித்துள்ளேன் நான் அந்த அனுபவத்திலிருந்து பாடம் கற்றுள்ளேன் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மன்னிப்பதன் மூலமே வன்முறையின் பின்னர் முன்னோக்கி நகரமுடியும் இதனை தவிர வேறு வழியில்லை, எனவும் குறிப்பிட்டுள்ள ராகுல்காந்தி மன்னி;ப்பதற்கு என்ன நடந்தது  ஏன் நடந்தது என்ற தெளிவு அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை எதிர்கொள்வதற்கு செவிமடுப்பதும் அகிம்சை வழியில் செயற்படுவதும் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் இது  பலவீனம் என கருதுகின்றனர் ஆனால் அதுவே உண்மையான பலம் எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

எனது தந்தை 1991 இல் பயங்கரவாதியால் கொல்லப்பட்டார் 2009 இல் எனது தந்தையை கொன்றவர் இலங்கையில் கொல்லப்பட் நிலையில் காணப்படுவதை நான் பார்த்தேன் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நான் எனது சகோதரியை அழைத்து இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது ஆனால் நான் இதனால் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்தேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மரணித்தவர் எனது தந்தையை கொன்றவர் என்பதால் நான் அவரின் மரணத்தை கொண்டாடவேண்டும்,ஆனால் ஏனோ நான் அந்த மரணத்தினால் மகிழ்ச்சியடையவில்லை எனவும் எனது சகோதரியிடம் தெரிவித்தேன் என  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதற்கு எனது சகோதரி நானும் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்தார் என ராகுல் காந்தி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நான் பிரபாகரனின் பிள்ளைகளில் என்னை பார்த்ததே  நான் மகிழ்ச்சியடையாததற்கு  காரணம் , எனது தந்தையின் மரணத்தின் போது நான் அழுதது போன்று பிரபாகரனின் மரணத்தின் போது அவரின் பிள்ளைகள் அழலாம் என நான் நினைத்தேன் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் தீயவராகயிருக்கலாம்,ஆனால் என்னை எனது தந்தையின் மரணம் பாதித்தது போன்று,

 அவரிற்கு எதிரான வன்முறைகள் ஏனையவர்களை பாதித்துள்ளன எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

நீங்கள் ஆழமாக சிந்தித்தால் இந்த வன்முறையை தூண்டிய ஏதோவொன்று இருக்கவேண்டும்,அது தற்செயலான சம்பவம் இல்லை,அவருக்கு அல்லது வேறு யாரிற்கோ எதிராக இடம்பெற்ற வன்முறைகள், நடவடிக்கைகள் வன்முறைகளை தூண்டியிருக்கலாம் எனவும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.