ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் பெண்­க­ளுக்­கான நீச்­சலில் 50 மீற்றர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் சீனாவின் லு ஸியாங் 26.98 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனை படைத்தார்.இதற்கு முன்பு சீனாவின் ஜாவ் ஜிங் 2009 ஆம் ஆண்டு உலக சம்பியன்­ஷிப்பில் 27.06 வினா­டி­களில் இலக்கை எட்­டி­யதே உலக சாத­னை­யாக இருந்­தது.

அதே­வேளை, நீச்சல் சம்­பியன் பெல்ப்ஸை வீழ்த்­திய சிங்­கப்­பூரின் ஸ்கூலிங் நேற்று நடை­பெற்ற ஆண்­க­ளுக்­கான 100 மீற்றர் போட்­டி­யில் தங்கப் பதக்கம் வென்­ற­மையும் குறிப்பிடத்தக்கது.