இந்தோனேசியாவில் இடம்பெற்று வரும் ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் 4x100 நீச்சல் போட்டிப் பிரிவில் இலங்கை அணியின் எதிர்­பார்ப்பை வீரர்கள் போட்டி நிறைவடையும் முன்னரே தகர்த்­து­விட்­டனர்.காரணம் போட்டி விதி­களை மீறி­ய­தனால் இலங்கை அணியை போட்டி நடு­வர்கள் போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற்­றினர்.

இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் நடை­பெற்ற கொமன்வெல்த் போட்­டி­க­ளின்­போதும் இலங்கை அணி போட்டி விதி­களை மீறிய குற்­றத்­திற்­காக வெளி­யேற்­றப்­பட்­டி­ருந்­த­மையும் நினைவுகூரத்தக்கது.

இந்தப் போட்­டியில் இலங்கை அணி சார்­பாக மெத்­தியூ அபே­சிங்க, கைல் அபே­சிங்க, செரந்த டி சில்வா மற்றும் அக­லங்க பீரிஸ் ஆகியோர் கலந்­து­கொண்­டனர். 

இந்த அணி நீச்சல் தடா­கத்தில் 6 ஆவது வரி­சையில் போட்டியிட்டது.

இதில் போட்­டியை ஆரம்­பித்த மெத்­தியூ அபே­சிங்க சிறந்த தொடக்­கத்தைக் கொடுத்து இரண்­டா­மி­டத்தைப் பெற்று தனது 100 மீற்­றரை வெற்றி­க­ர­மாக நிறை­வு­செய்தார். 

ஆனாலும் மெத்­தியூ எல்­லைக்­கோட்­டுக்கு வர­முன்னரே இரண்டாவது வீர­ரான கைல் அபே­சிங்க தடா­கத்­திற்குள் குதித்ததே போட்டியிலிருந்து இலங்கை அணி வெளியேற காரணமாக அமைந்தது.

இலங்கை நீச்சல் பயிற்­சி­யாளர் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், இந்த நான்கு பேரும் ஒன்­றாக சேர்ந்து பயிற்சி மேற்­கொள்­ளா­த­தே இந்த தவ­றுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.