இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 6 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மீனவர்கள் பயன்படுத்திய  படகு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்திய மீனவர்கள், எம்மை அவதானித்தவுடன்  கடலில் குதித்து றெஜிபோர்மின் உதவியுடன் நீரில் மூழ்கி தப்பிக்க முயன்றனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு 10.20 மணியளவில் இவ்வாறு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இந்திய மீனவர்களை நேற்றய முன் தினம் கடற்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.