இன்று காலை நாக பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்காக 10 மீனவர்களுடன்  கடலுக்கு சென்ற மீனவர் படகு மன்னார் கடற்பரப்பில் மூழ்கியதில் இருவர் மாயம்.

படகு மூழ்கியதால் கடலில் தத்தளித்த இந்திய 8 மீனவர்களை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மீட்டுள்ளனர்.

எஞ்சிய இரு மீனவர்களை தேடும் பணிகளில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.