இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் வெற்றியை விராட்கோலி தனது மனைவி க்கு சமர்ப்பித்துள்ளார்.

டிரென்ட் பிரிட்ஜில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

விராட்கோலி மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்த டெஸ்ட் போட்டியை திரும்பிப்பார்த்தால் எனக்கும் ரகானேயிற்கும் இடையிலான இணைப்பாட்டம் மிகவும் முக்கியமானது.

ரகானே முதல் இனிங்சில் தெளிவான மனோநிலையில் காணப்பட்டார்,அவர் அவ்வாறு விளையாடும் போது அவர் மிகவும் பார்ப்பதற்கு அழகாக காணப்படுவார்,மேலும் அவரால் போட்டியின் போக்கை மாற்ற முடியும்.

விக்கெட்களை இழக்காமல் நீண்டநேரம் நிலைத்து நின்று விளையாடுவது முக்கியம்.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு குழாம் மிகவும் திறமை வாய்ந்தது அவர்களிற்கு எதிராக ஓட்டங்களை பெறுவது உறுதிப்பாடும், துணி;ச்சலும் அவசியம்.

ரகானே முதல் இனிங்சில் அந்த குணாதிசயங்களை வெளிப்படுத்தினார் புஜாரா இரண்டாவது இனிங்சில் அவ்வாறு விளையாடினார்.

நான் 2014 தோல்விகளை பற்றி ஒருபோதும்  நினைத்ததில்லை.

நான் என்னை தொடர்ந்து உற்சாகமூட்டி வரும் எனது மனைவிக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகின்றேன்.

இந்திய அணியின் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களும் சிறந்த உடற்தகுதியை வெளிப்படுத்தி வருகின்றனர் இங்கிலாந்து அணியினர் சுலபமாக ஓட்டங்களை பெறுவதை நாங்கள் அனுமதிக்க விரும்பவில்லை என கோலி தெரிவித்துள்ளார்.