“தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது”

Published By: Daya

22 Aug, 2018 | 02:58 PM
image

தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்பு இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தை தொல்பொருட் திணைகளம் கையகப்படுத்த முயல்வது தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்பு இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது. 

அந்த வகையில் தான் வடபகுதியில் இன்று தோன்றியுள்ள கஞ்சா கடத்தல், மதுபோதை, குத்துச் சண்டைகள், வாள்வெட்டுக்கள் போன்ற குழுக்களை உருவாக்கி விட்டிருக்கின்றது. இதன் ஒரு அடுத்த கட்டமாக தமிழ் இனத்தின் இருப்பை இல்லாதொழித்து இருப்புக்களை மாற்றியமைக்கும் வகையில் தொல்பொருட் திணைக்களத்தின் கீழ் பல்வேறு விதமான எமது ஆதிக்குடிகளது காணிகள் அடாத்தாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

வவுனியா வடக்கு, நெடுங்கணி பகுதியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் ஆனது ஆதிகாலம் தொட்டு இந்துக்களால் வழிப்பட்டு வருகிறது. 

தொல்பொருட் திணைக்களத்தின் கீழ் உள்ளடங்காத இந்த கோவிலை தற்போது தொல்பொருட் திணைக்களம் தனது ஆளுகைக்குள் கொண்டு வர எத்தனிப்பது மிகவும் வேதனையான விடயம். 

அரசினுடைய இவ்வாறான வேலைகள் மிகவும் கண்டனத்திற்குரியது. உடனடியாக அவற்றை விடுத்து, இந்த நிலைப்பாடுகளை மாற்றியமைத்து தமிழர் தமது நிலங்களில் இயல்பாகவே தமது இன சுதந்திரம், மத சுதந்திரத்தோடு வாழக் கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும். 

இது தவறின் இந்த மக்களுடைய போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் அரசுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19