லண்டனைச் சேர்ந்த தம்பதிகளுக்கு தங்களது முதல் குழந்தையை இவ்வுலகிற்கு கொண்டு வருவதற்குள் 4 ஆண்டுகளையும், 1,616 ஊசிகளையும் 3 கருச்சிதைவுகளையும் கடக்க வேண்டியிருந்துள்ளது.

அண்மையில் லண்டனைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தையை சுற்றி இதய வடிவில் ஊசிகள் அடுக்கப்பட்டிருப்பதை போன்ற புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அர்த்தம் பொதிந்த அழகான குறித்த புகைப்படம் பேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டு 60,000த்திற்கும் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

இப் புகைப்படத்திற்கு பின்னால் ஒரு வழி நிறைந்த உண்மைக் கதை மறைந்துள்ளது.

தம்பதினருக்கு குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்பட்டால் பெண்ணின் கரு முட்டையையும் ஆணின் உயிரணுவையும் டெஸ்ட்டியூபில் இணைத்து ஐ.வி.எப் காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு சில நாட்களுக்கு பின்னர் அதனை பெண்ணின் கருப்பையினுள் ஊசி மூலம் உட்செலுத்துவர்.

இம் முறையே மருத்துவ உலகில் ஐ.வி.எப் என அழைக்கப்படுகிறது.

இம் முறையினூடாக இன்று பல தம்பதிகளுக்கு வாழ்வளிக்கப்பட்டு வந்தாலும் கூட இம் முறை நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றியடையும் என்று கூறிவிடமுடியாது அதிலும் முதல் முறையிலேயே சாத்தியமாகி விடும் என்பது பெரும் சந்தேகம்

இந்த ஐ.வி.எப் ஊசியினை ஒரு முறை பெண்ணிற்கு ஏற்றுவதற்கு 2 தொடக்கம் 3 லட்சம் வரை செலவாகும்.

இவ்வாறிருக்க இம் முறையின் மூலம் ஒரு பெண்ணிற்கு அதிகபட்சம் 4 தடவைகள் மாத்திரமே ஊசி ஏற்ற முடியும்.

அதனை மீறி ஊசி ஏற்றப்பட்டால் பெண்ணிற்கு மார்பகப் புற்று நோய் அல்லது கருப்பை புற்று நோய் ஏற்படும் அபாயம் நூற்றுக்கு 85 சதவீதம் காணப்படுவதாக மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

ஆனால் லண்டனைச் சேர்ந்த 30 வயதான பட்ரிக்கா மற்றும் 37 வயதான கிம்பர்லி தம்பதியினரின் வாழ்வில் மருத்துவ உலகையே வியக்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டளவில் அதாவது இருவரும் திருமணம் முடித்து ஒரு வருடத்தின் பின்னர் தங்களது குடும்பத்தை விரிவு படுத்த விரும்பினர்.

பல முயற்சிகளை மேற்கொண்டும் தம்பதிகளின் குழந்தை கணவு நனவாகவில்லை இறுதியில் ஐ.வி.எப் முறையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இம் முறையிலும் தொடர் தோல்வியை சந்தித்தாலும் தம்பதிகள் முயற்சியை கைவிடவில்லை.

வைத்தியர்களால் பல முறை அறிவுறுத்தப்பட்டும் பட்ரிக்கா  ஐ.வி.எப் ஊசிகளை ஏற்றிக்கொண்டுள்ளார்.

பல முறை ஆபத்தான கட்டத்தை கடந்தும் தொடர்ந்து 4 ஆண்டுகள் பட்ரிக்கா ஐ.வி.எப் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முயற்சித்ததில் 1,616 ஊசிகள் ஏற்றபட்டதோடு 3 முறை கருச்சிதைவும் ஏற்பட்டுள்ளது.

பல சோதனைகளை தாண்டி குறித்த தம்பதிகளுக்கு கடந்த 3ஆம் திகதி ஒரு அழகான பெண் குழந்தை வரமாக கிடைத்துள்ளது.

குறித்த ஜோடிகள்  தங்கள் கடந்து வந்த பாதையை நினைவு கூர்வதற்காக தங்களுக்கு ஏற்றப்பட்ட 1616 ஐ.வி.எப் சிரஞ்களையும் சேர்த்து வைத்துள்ளனர்.

அவர்கள் ஏற்றிக்கொண்ட ஒவ்வொரு ஊசிகளும் ஒரு அழகான பெரிய இதயத்தை உருவாக்க துனை புரிந்தது என தம்பதிகள் நெகிழ்ச்சியாக தெரிவிக்கின்றனர்.

தாங்கள் அனுபவித்த துன்பம் கடந்து வந்த பாதை அத்தனை ஊசிகளை ஏற்றிக்கொண்டது ஒரு துடிப்புள்ள இதயத்தை தோற்றுவிப்பதற்கே என்ற கருத்தை வெளிப்படுத்துவதற்காகவும் தங்களுக்கு  ஒரு குழந்தை செல்வம் தோன்ற காரணமாகவிருந்த ஊசிகளை தங்களின் குழந்தையை சுற்றி இதய வடிவில் அடுக்கி புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

குழந்தையின் அழகிய முகத்தை பார்ப்பது இவ்வுலகத்தில் கிடைக்கும் அதிகபட்ச மகிழ்ச்சியை தருகிறது என குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.