தற்போது மக்களில் பலர் சுயனலம் என்ற ஒரு மாயப்போர்வையின் இருந்து கொண்டிருக்கின்றார்கள்

ஒட்டுமொத்த சராசரி உலகில் இந்த சுயனலம் எங்களை மனிதர்கள் என்பதையே மறக்கடிக்கக்கூடிய வகையில் செயற்படுகின்றது என்று கூற கூறலாம்.

நவீன வசதிகளையும் புதிய விடையங்களையும் தினம் தினம் தேடித்திரியும் நாம் எமக்குள் மனிதர்களாக எம்மை உணரச்செய்யும் மனிதத்தை தற்போது இழந்து கொண்டிருக்கின்றொம் என்பதை ஏற்க மறுக்கின்றோம்.

சுயனலச் செய்கைகளினால் நம்மை நாமே இழந்து கொண்டிருக்கின்றொம் என்பதை நினைவுட்டும் வகையில் வெளியாகியிருக்கின்றது இலங்கையின் சொல்லிசைக்கலைஞர்கள் MC.RA மற்றும் Pream.Jr இன் உருவாக்கத்தில் ”மனிதமுண்டோ” பாடல். 

அண்மையில் வெளியாகிய இந்த பாடலில் இலங்கையின் பல பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாட்டின் பல கலைஞர்கள் பங்குபற்றியிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

மேலும் இந்தப்பாடலில் ஸ்ரீ நிறோசன், யொங் கிறிஸ் ஆகியோர் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திரீக்கின்றனர்

சுயனல எண்ணங்களினால் தனது நண்பனையே கொலைசெய்யும் ஒரு நண்பனுக்கு ஏற்படும் விளைவுகளை மைய்யப்படுத்தி சுயநலம், வஞ்சனை, பொறாமை என்பன வேண்டாம் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தப்பாடல் அமைந்துள்ளது சிறப்பம்சமாகும்.

பாடலுக்கான இசை  சம் சஞ்சீவினால் உருவாக்கப்பட்டுள்ளதுடன்  MC RA மற்றும் Pream.Jr இன் சொல்லிசை வரிகள் மேலும் பாடலுக்கு மெருகூட்டியிருக்கின்றது, இந்தப்பாடல் வரிகளில் திருக்குறள் உள்ளடக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

ஏன் திருக்குறள் என்றதற்கு எம் பாரம்பரியங்களை நாம் தான் பின்பற்றவும் காப்பாற்றவும் வேண்டும் என்கிறது பாடல் தயாரிப்புக்குழு

நாம் பயணித்துக்கொண்டிருக்கின்ற சுயநலப்பாதையை விடுத்து மனிதத்தை மீட்டிப்பாரக்க சொல்லும் ”மனிதமுண்டோ” பாடல் நம் அனைவருக்கும் அவசியமான ஒன்றுதான் 

மேலும் சமூக அக்கறைகளுடன் கூடிய படைப்புக்கள் எம் சமுதாயத்திற்கு அவசியம் எனவும் ஆகவே சமூகத்தின் குறை நலன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் தங்களது எதிர்வரும் படைப்புக்கள் அமையும் எனவும் பாடல் தயாரிப்புக் குழு தெரிவிக்கின்றது.