பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்த வருமாறு இந்தியாவிற்கு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டு மறுபுறம் பயங்கரவாத தாக்குதல்களை கடந்த கால நவாஷ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கம் ஊக்குவித்தமையால் இந்தியா பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுவார்த்தையை நிறுத்திக்கொண்டது.

தற்போது பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் எற்பட்டுள்ள நிலையில் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றுள்ளார்.

பிரதமராக பதிவியேற்றுள்ள இம்ரான் கான் அதிரடியாக பல செயற்பாடுகளில் இறங்கியுள்ளார்.

அந்த வகையில் தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இம்ரான் கான் நேற்று,

“இந்தியாவும் பாகிஸ்தானும் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு கண்டிப்பாக பேச்சுவார்ததை நடாத்த வேண்டும் காஷ்மீர் உள்ளிட்ட மோதல்களை தீர்த்துக்கொள்ள வேண்டும்

வறுமையை ஒழித்துக்கட்டி விட்டு துணைக்கண்டத்தில் உள்ள மக்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்கு நமது கருத்து வேறுப்பாடுகளை தீர்த்துக்கொண்டு வர்த்தகத்தை தொடங்குவது தான் சிறந்த வழி” என்று டுவிட் செய்துள்ளார்.

 

.