காற்றின் மொழி

Published By: Daya

22 Aug, 2018 | 11:43 AM
image

 ஜோதிகாவின் அடுத்த தமிழ் படம்  காற்றின் மொழி விரைவில் திரைக்கு வருகிறது.

36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக்  அடித்த  ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில்  'துமாரி சுலு' என்ற  சூப்பர் ஹிட் இந்தி  படத்தின் தமிழ்  ரீமேக்கான "காற்றின் மொழி "படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம்  அக்டோபர் 18ஆம் திகதி திரைக்கு வருகிறது.மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி  காற்றின் மொழியில் மீண்டும் இணைந்து  களமிறங்கியுள்ளனர் .அதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விதார்த் ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார்.

மொழியில் ஊமையாக கண்களாலும் செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா "காற்றின் மொழி"யில் அதற்கு நேர் மாறான  வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்,  தமிழ் கலாச்சாரத்துக்கு  ஏற்றவாறு திரைக்கதை அமைத்து புதிதாக சில கதாபாத்திரங்களையும் சேர்த்து புதுமையான  பல  விஷயங்களோடு   இப்படத்தை   இயக்கியுள்ளார், ராதா மோகன் .பெண்ணை மையப்படுத்திய படம் என்றாலும், அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான  ஜாலியாக குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும் காற்றின் மொழி  என்றார் ராதா மோகன் . 

விதார்த் கூறுகையில் " ஜோதிகாவின் கணவராக நான் இதில் நடிக்கிறேன் .கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை.இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான, அன்பான கணவராக நடித்துள்ளேன்.  விதார்த் நல்ல நடிகன் என்று இந்த குடும்பப்பாங்கான கதை  எனக்கு  மீண்டும் ஒரு அடயாளத்தை கண்டிப்பாக  கொடுக்கும். " 

லட்சுமி மஞ்சு மற்றுமொரு  முக்கிய கதாபாத்திரமாக நடிக்க, சிம்பு "காற்றின் மொழி"யில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் . குமாரவேல், பாஸ்கர் ,மனோபாலா, மோகன் ராமன் ,உமா பத்மநாபன்  மற்றும்  பலர் நடித்துள்ளனர். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை செய்து  A.H. காஷிஃப் இசையமைதுள்ளார் . பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.,) க்காக G.தனஞ்ஜயன், S.விக்ரம் குமார், மற்றும் லலிதா தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35