கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கட்டிட நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்கும் பணியை இணையத்தளத்தினூடாக மேற்கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் அனுமதியை வழங்கும் செயற்பாடுகள் விரைவாக இடம்பெறும் என்று கொழும்பு மாநகர சபையின் நகர திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குமுதினி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநாகர சபையால் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதிமுறைகளின் கீழ் நிர்மாண பணிக்கான அனுமதியை இரண்டு வாரத்துக்குள் மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேலதிகமாக நிர்மாணத்துக்கான அனுமதியை வழங்குவதற்கான ஒழுக்க விதிகளை இதன் மூலம் ஏற்படுத்தப்படும் என்றும் கொழும்பு மாநகரசபை திட்டமிடல் பணிப்பாளர் திருமதி குமுதினி சமரசிங்க மேலும் தெரிவித்தார்.