கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸை நேற்று  சிறப்பு அதிரடி படையினர் நிறுத்தி விசேட சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் படி கொழும்பில் இருந்து சென்ற பஸ்ஸை , செட்டிக்குளம் – ஆடம்பன்குளம் பகுதியில் மறித்த அதிரடி படையினர், சோதனையிட்டனர்.

தற்போது நாட்டில் அதிகளவிலான போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல்கள் அதிகரித்துள்ளமையால் இவ்வாறான சோதனைகள் அடிக்கடி இடம்பெற்று வருகின்றது.

அந்தவகையில், அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக குறித்த சோதனை இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் தரப்பில் இருந்து வேறு தகவல்கள் வெளியாகவில்லை.