சுழிபுரம் மாணவி கொலை வழக்கு  ; சாட்சியாளர்களுக்கு நீதிமன்று அழைப்பு 

Published By: Digital Desk 4

22 Aug, 2018 | 01:14 AM
image

யாழ். சுழிபுரம் பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவின் வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணையானது நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில், நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கின் இரண்டாம் சாட்சியமான 10 வயது சிறுமியையும், 7 வயது சிறுவனையும் நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியையும் விசாரணை அதிகாரிகளையும் எதிர்வரும் 31ஆம் திகதி வௌ்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் 6 வயதான சிவனேஸ்வரன் ரெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி பாழடைந்த கிணற்றிலிருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47