முல்லைத்தீவில்  பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபரை புதுக்குடியிருப்பு பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளார்கள்.

முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில்  உயர்தர பரீட்சை எழுதிவரும்  19 வயது மாணவியை பளையினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் நேற்றுமுந்தினம்  பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவியை ஊர்தி ஒன்றில் கடத்தி சென்று பளைப்பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துவிட்டு இன்று உடையார் கட்டுப்பகுதியில் கொண்டுவந்து இறக்கிவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மாணவியின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மேற்கொண்ட விசாரணையினை தொடர்ந்து புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் பளைப்பகுதிக்கு சென்று மாணவி கடத்தலுக்கு உதவிய நபர் ஒருவரை  நேற்று பிற்பகல் கைதுசெய்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து நேற்று இரவு பளைப்பகுதிக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த மாணவியை கடத்தி பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட பளை பகுதியினை சேர்ந்த 22 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளார்கள்.

இவர்களை  முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.