Dogs

கிழக்கு மாகாணத்தில் மிகப்பெரிய ஓய்விடமாகவும் உள்ளுர் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாகவும் மாறியுள்ள காத்தான்குடி கடற்கரை திடலில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நாய் மற்றும் மாடுகளின் தொல்லையால் குறித்த கடற்கரை திடல் நாசமடைந்து வருவதுடன் ஓய்விற்காய் வரும் மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர் காண்டு வருகின்றனர்.

காத்தான்குடி, புதிய காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி, மட்டக்களப்பு உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலிருந்தும் தூர இடங்களிலிருந்தும் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்விற்காக ஆயிரக்கணக்கானோர் இத்திடலிற்கு வருகின்றனர்.

இத்திடலில் பெருமளிவில் கூடும் நாய்களும் மாடுகளும் அவற்றின் இயற்கைக் கழிவுகளை திடலில் விட்டுச் செல்வதாலும் தொடர்ச்சியாக இவைகள் திடலில் கிடப்பதாலும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் கொண்டுள்ளனர். குறித்த கட்டாக்காலிகளை அகற்ற நகர சபை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.