"போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது"

Published By: Digital Desk 7

21 Aug, 2018 | 05:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கம் நிலையான அபிவிருத்திகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளது .கடந்த அரசாங்கத்தினை போன்று அபிவிருத்தி என்ற பெயரில் போலியான அபிவிருத்திக்களை மேற்கொள்ளவில்லை  எமது நிலைபேறான அபிவிருத்திக்கு மொரஹாகந்த மற்றும் களுகங்கை அபிவிருத்திக்களே  எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது என்று தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனையின் கீழ் வயம்ப  நீர்த்தேக்கத்தின் கட்டுமாணப்பணிகள்  நாளை மறுதினம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம் பெறவுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி  இலங்கையினை விவசாய தன்னிறைவுடைய நாடாக மாற்றுவதே எமது நோக்கம் என தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு கருத்துரைக்கும்  போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்  மேலும் கூறுகையில்,

"தேசிய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை என்று எதிர் தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர்.  அரசாங்கம் என்ன அபிவிருத்திகளை  செய்துள்ளது என்ற விடயத்தை பயனடைந்த மக்கள் நன்கு அறிவார்கள் . கடந்த அரசாங்கம் செய்ததை போன்று தேசிய அரசாங்கம் செய்ய வில்லை என்ற விடயத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டும் அனைத்து  துறைகளிலும் ஊழல் மோசடிகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.

மொரஹாகந்த அபிவிருத்தி திட்டம் கடந்த அரசாங்கத்தில் இழுத்தடிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டமாகவே காணப்பட்டது இதன் காரணமாக  பல விவசாய குடும்பங்கள்  பாரிய பிரச்சினைகளை எதிர் கொண்டனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறுகிய காலக்கட்டத்தில்  இவ்விரு பாரிய வியத்தகு  அபிவிருத்தி திட்டங்களும் முழுமையாக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

அரசாங்கம் தேசிய உற்பத்தியினை  இல்லாதொழிப்பதாக குறிப்பிடுபவர்கள்  நாட்டு நடப்புக்கள் அறியாமலே கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர். இன்று  தேசிய உற்பத்திக்கள் பாரிய அளவில் முன்னேற்றமடைந்துள்ளது.  கடந்த காலங்களில்  இறக்குமதி செய்யப்பட்ட  உற்பத்திக்கள் இன்று  ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  சுற்றுலாத்துறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளமையின் காரணமாக  அந்நிய செலாவனி அதிகளிவில் கிடைக்கப் பெறுகிறது. சர்வதேசத்தின்  அதிருப்தியை பெற்ற நாடாக காணப்பட்ட இலங்கை இன்று அனைவரினதும் வரவேற்பை பெற்றுள்ளது இதுவே எமது பாரிய வெற்றியாகும்.

அரசாங்கத்தை கவிழ்ப்பதாக பொது  எதிரணயினர் பல  போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அவர்களின்  போராட்டம் அரசாங்கத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை .  எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உள்ள போராட்டம்  எமக்கு  ஒரு சவாலல்ல  . போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31