விஜயகலா மகேஷ்வரனுக்கெதிராக நடவடிக்கை எடுக்க முடியும் : சட்டமா அதிபர்

Published By: Digital Desk 7

21 Aug, 2018 | 05:43 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் குறித்த முடிவினை சபநாயகர்  வியாழக்கிழமை கூடவுள்ள பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

மேலும் சட்டமா அதிபர் அனுப்பியுள்ள அறிக்கையில்,

"விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை."

ஆகவே இது தொடர்பிலும் சட்டமா அதிபரின் முடிவினையும் உடன் அறிவிக்குமாறும் சபாநாயகர் கோரியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை சட்டமா அதிபர் விரைவில் முன்வைக்க கூடும் என்று எதிர்பார்ப்பதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பிட்டது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீள் உருவாக வேண்டும் என யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்புக்கும், எதிர்ப்புக்கும் உள்ளானது. தெற்கு அரசியல் கட்சிகள் பெரும் எதிர்ப்புகளை வெளியிட்டன. இந்த கருத்து தொடர்பில் பாராளுமன்றத்திலும் சர்ச்சையான நிலைமை ஏற்பட்டதை அடுத்து இந்த கருத்து தொடர்பாக பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் போது அமைச்சர்களான திலக் மாரப்பன, வஜிர அபேவர்தன, வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன், தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உட்பட பலரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அத்தோடு விஜயகலா மகேஸ்வரன் எம்.பியிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இதனையடுத்து விசாரணை நிறைபெற்று பொலிஸ் தமது அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளித்தது.

இந் நிலையில் வாக்குமூலம் மற்றும் பொலிஸ் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய தனது தீர்மானத்தை அறிக்கையின் ஊடாக சபாநாயகரிடம் கையளித்துள்ளார். இந்த அறிக்கையின் பிரகாரம் முன்னாள் பிரதி அமைச்சரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நிலையியற் கட்டளை பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் என சட்டமா அதிபர் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார். 

எனினும் சட்டமா அதிபர் அனுப்பியுள்ள அறிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா? இல்லையா? என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை. இதனால் குறித்த கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா என உடன் அறிவிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சட்டமா அதிபரிடம் கோரியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் அலுவலக அதிகாரியொருவரிடம் வினவிய போது அவர் மேலும் கேசரிக்கு குறிப்பிடுகையில்,

"விஜயகலா மகேஸ்வரன் எம்.பியின் கருத்து அரசியலமைப்புக்கு முரணானதா? இல்லையா? என்பது தொடர்பில் எந்தவொரு குறிப்பும் இடப்படவில்லை. எனவே அரசியலமைப்பின் பிரகாரம் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து முரணாதா என்பது தொடர்பில் சட்டமா அதிபரின் முடிவினை சபாநாயகர் எதிர்பார்த்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பினை சட்டமா அதிபர் விரைவில் முன்வைக்க கூடும் என்று எதிர்பார்பார்கின்றோம்.

எவ்வாறாயினும் சட்டமா அதிபர் தற்போது வழங்கியுள்ள முடிவினை சபநாயகர் வியாழக்கிழமை கூடவுள்ள பாராளுமன்றத்தில் அறிவிப்பார்." என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துபட்ட கூட்டணி குறித்து சிந்திக்கிறோம் :...

2024-04-15 16:12:00
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்...

2024-04-15 17:06:59
news-image

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் :...

2024-04-15 16:09:52
news-image

மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

2024-04-16 08:52:36
news-image

விக்னேஸ்வரனிடம் கால அவகாசம் கோரினார் வேலன்...

2024-04-15 16:06:32
news-image

வெள்ளியன்று தமிழரசின் மத்திய குழுக்கூட்டம் : ...

2024-04-15 15:58:07
news-image

இன்றைய வானிலை

2024-04-16 06:15:57
news-image

யாழில் போதைப்பொருள் பாவனைக்காகத் திருட்டில் ஈடுபட்டவர்...

2024-04-16 01:31:08
news-image

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை இலகுபடுத்த விரைவில்...

2024-04-15 22:57:31
news-image

இலங்கைக்கு வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது...

2024-04-15 21:46:59
news-image

தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது...

2024-04-15 20:01:54
news-image

கம்பளையில் பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்து 9...

2024-04-15 19:10:56