வங்கியொன்றில் உள்நுழைந்த கொள்ளையர்கள் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை, கந்தர பரவெஹர பிரதேசத்திலுள்ள வங்கியொன்றிலேயே குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நான்கு பேரடங்கிய கொள்ளைக் கும்பலே குறித்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தே பணத்தை கொள்ளையிட்டுச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்த பெண் வங்கியின் வாடிக்கையாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வங்கியிலிருந்து 3 இலட்சம் ரூபா பணம் கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.