(நா.தினுஷா)

மஹிந்த ராஜபக்ஷ 2015ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் மீண்டும் போட்டியிட முயற்சிப்பதானது பதவி மீதான அவரது பேராசையை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி , நடைமுறையில் உள்ள அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடையாது எனவும் குறிப்பிட்டுள்ளது. 

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இந்துனில் துஷார கூறுகையில் , 

"2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி எதிர்தரப்பு வேட்பாளர்கள் வரிசையில் ஆரம்பத்தில் கோத்தபாய ராஜபக்ஷவின் பெயர் முன்வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் பசில் ராஜபக்ஷவின் பெயர் முன்வைக்கப்பட்டது. பின்னர் சமல் ராஜபக்ஷ என்று கடந்த காலங்களில் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டி நிலை ராஜபக்ஷ குடும்பத்தில் காணப்பட்டது.   இந்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக்கும் எண்ணப்பாடுகள் எழுந்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற பின்னரும் மீண்டும் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி வேட்பாளராக நிட்க விரும்புவது அவர் பதவியின் மேல் கொண்ட ஆசையினாலாகும். முப்பது வருட கால போர் சூழலை நிறைவுக்கு கொண்டு வந்ததன் பின் தனது ஜனாதிபதி பதவியிலிருந்து படிபடியாக கீழிறங்கி மீண்டும் அப் பதவிக்கு போட்டியிட விரும்புவது வீண் முயற்சியாகும்.

பதவியினை கைமாற்றுவதற்கு விருப்பமின்மையினாலும், தனது கௌரவத்தை தக்கவைத்துக்கொள்வதற்காகவுமே மீண்டும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க எண்ணியுள்ளார். ராஜபக்ஷ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறிவிடும் என்ற பயத்தின் காரணமாகவே சகோதரர்களின் மூலம் பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினாலேயே மஹிந்த ராஜபக்ஷவே நேரடியாக வேட்பாளராக களமிரங்கியுள்ளார். 

மறு புறம் இது புதிய புதிய திட்டங்களையும், கருத்தக்களையும்  முன்வைத்து தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக எதிர்தரப்பினர் மேற்கொள்ளும் புதிய முயற்சியாகவே இதனையும் கருத வேண்டியதாகவுள்ளது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதும் முன்னாள் ஜனாதிபதி பிரதமராகும் எண்ணத்தினைக்கொண்டே மக்களிடம் வாக்குகளை திரட்டிக்கொண்டார். 

ஆனால் பிரதமாராகும் கனவு வெற்றியளிக்கவில்லை, இந் நிலையில் கடந்த நாட்களில் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்றக்கொள்வதற்கு கூட்டு எதிரணியினர் முயற்சித்து வந்தனர். அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்திருந்தது. அகவே அரசியலில் நிலையக இருக்கும் நோக்கத்தினைக் கொண்டு புதிய புதிய கருத்துக்களை தோற்றுவித்து மக்களின் பார்வையை தனது பக்கம் திருப்பும் முயற்சியாகவும் இதனைக்கொள்ளலாம். 

மேலும் 19 ஆம் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் படி ஜனாதிபதியொருவர் ஐந்து வருடங்களே பதவியிலிருக்கலாம். அரசியல் அமைப்பு உறுதியாகவும் பலமிக்கதாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுவதற்கான நீதிகளை கேட்பதற்கு முன்னாள் ஜனாதிபதி முற்படுவது கூட்டு எதிரணியினரின் மத்தியில் பரப்பரப்பினை ஏற்படுத்துவதனூடாக பிரச்சினையை ஏற்படுத்துவதற்காகவும். 

ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் தொடர்பான பொலிஸாரின் விசாரணையின் போதும் தெரியாது, கண்டதில்லை, அறியவில்லை போன்ற பொறுப்பற்ற பதில்களையே முன்வைத்திருந்தார். இவ்வாறு பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்தது நினைவில்லாத ஒருவர் எதிர்கால தலைவறாக இருக்கமுடியும். இவரின் ஆட்சிகாலத்திலேயே 30 வரையிலான ஊடகவியலாளர்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகங்கள் மீது தாக்குதல்களை மேற்கொள்ளுதல், ஊடகவியலாளர்களை கடத்துதல் அச்சுருத்தல் வழங்குதல் போன்ற நிலைகள் இன்று இல்லாது செய்யப்பட்டுள்ளன. 

கடந்த அரசாஙகத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஏற்ப்பட்ட அநீதிகள் தொடர்பான விபரங்கள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும். அதற்கான சுதந்திரத்தை நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தகுந்த ஆதாரங்களை கடந்த அரசாங்கத்தினர் முன்வைக்காவிட்டால் ஊடகவியலாளர்கள் இது குறித்த கவனம் செலுத்துவதுடன் இன்மேலும் அதுபோன்ற சம்பங்கள் இடம்பெறாத வகையில் தமது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் பிரதமரை வேட்பாளறாக நிறுத்துவோம். ஆனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்விடயம் குறித்து எதுவும் முன்வைக்கவில்லை. தகுந்த காலம் வரும் போது ஐக்கிய தேசிய கட்சி சார்பில் தகுதியான ஒருவரை வேட்பாளராக நிறுத்துவோம்." என்றார்.