(இரோஷா வேலு) 

புல்மூட்டை - யாங் ஓயா பிரதேசத்தில் வைத்து கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற சந்தேகத்தின் பேரில் சிறுவன் உள்ளிட்ட இருவர் கடந்த திங்கட்கிழமை மாலை உயர் ரக வாகனமொன்றுடன் புல்மூட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தின் போது நிலாவெளி மற்றும் திருகோணமலை நகரப் பகுதியைச் சேர்ந்த 17 மற்றும் 27 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களை கைதுசெய்த வேளையில் அவர்களிடமிருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாவும் அவர்கள் பயணித்த உயர் ரக வாகனமொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கைது செய்த இருவரையும் இன்று  திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.