எட்டு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞனின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக பாதையில் நடக்கச் செய்த   சம்பவம் ஒன்று ஆர்ஐன்டீனாவில் பதிவாகியுள்ளது.

வீட்டில் இருந்த சிறுமி ஒருவரை இளைஞன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளான். இதனையடுத்து பிரதேச மக்கள் இளைஞனை பிடித்து நிர்வாணமாக்கி  நையப்புடைத்துள்ளனர்.

சம்பவம் இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தை பிரதேசவாசி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளதோடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.