தலவாக்கலை – லிந்துல  நகர சபையின் உப தலைவர் எல்.பாரதிதாசன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்க்ளேர் தோட்டத்தில் 4 ஏக்கர் காணியை அபகரிக்க முயற்சித்ததார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பாரதிதாசன் கைது செய்யப்பட்டள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாரதிதாசன் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.