ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் இலங்கை மகளிர் கபடி அணி பதக்கம் வெல்லும் வாய்ப்பை மேலும் அதி­க­ரித்துக் கொண்­டுள்­ளது.

நேற்­றைய நாளில் ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களை நடத்தும் இந்­தோ­னே­ஷி­யா­வையும் ஜப்­பா­னையும் வீழ்த்தி முன்­னேற்றம் கண்­டுள்­ளது.

45 நாடுகள் பங்­கேற்­றுள்ள ஆசிய விளை­யாட்டுப் போட்­டிகள் இந்­தோ­னே­ஷி­யாவில் நடை­பெற்­று­ வ­ரு­கின்­றன. கடந்த சனிக்­கி­ழமை இடம்பெற்ற உத்­தி­யோ­கபூர்வ ஆரம்­ப ­வி­ழாவையடுத்து நேற்­று­ முன்­தினம் போட்­டிகள் ஆரம்­ப­மா­யின.

இந்­நி­லையில் போட்­டியின் இரண்டாம் நாளான நேற்று நடை­பெற்ற முத­லா­வது போட்­டியில் இலங்கை மகளிர் கபடி அணி தொடரை நடத்தும் இந்­தோ­னே­ஷி­யாவை எதிர்­கொண்­டது.

இப் போட்­டியில் அபா­ர­மாக ஆடிய இலங்கை அணி 34–17 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று முன்­னே­றி­யது.

இத­னை­ய­டுத்து நேற்றுப் பிற்­பகல் நடை­பெற்ற இரண்­டா­வது போட்­டியில் இலங்கை அணி ஜப்­பானை எதிர்­கொண்­டது.

இப் போட்­டி­யிலும் சிறந்­த­தொரு ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திய இலங்கை அணி ஜப்­பானை 22–17 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வீழ்த்தி பதக்கம் வெல்லும் எதிர்­பார்ப்பை அதி­க­ரிக்க வைத்­துள்­ளது.

இந்­நி­லையில் இன்­றைய போட்­டியில் பலம் பொருந்­திய அணி­யான இந்­தி­யாவை இலங்கை அணி எதிர்­கொள்­ள­வுள்­ளது. இந்தப் போட்­டியில் வெற்­றி­பெற்றால் பதக்­கத்தை உறுதிப்படுத்­திக்­கொள்­ளலாம்.  அதே­வேளை ஆண்­க­ளுக்­கான கபடிப் போட்­டியில் இலங்கை அணி தனது முதல் போட்­டியில் தாய்­லாந்து அணியை வீழ்த்தி வெற்­றி­பெற்­றமை விசேட அம்­ச­மாகும்.